தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம்
புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது,டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபா,டி.கே.சங்கரன்,டி.கே.முத்துசாமி,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,என்னும் அந்த சகோதரர்கள் நால்வரில் ஒருவர்தான் டி.கே.சண்முகம்.அவர்கள் நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும் நாடகத்துறையின் தொல்காப்பியர் என்றும் மக்கள் குறிப்பிட்டார்கள்.
பிறப்பு மற்றும் வளர்ச்சி
1912 ஏப்ரல் 26ம் தேதி,பிறந்த டி.கே.சண்முகம் அவர்கள் தமது ஆறாவது வயதிலேயே நாடகத் தந்தை என்று போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நடிகராகச் சேர்த்தார்.74,நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரபாத்திரங்களை ஏற்றுத் தம் சீரிய நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார்.அவற்றுள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறிப் பாடல்களைப் பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான அவ்வை ,என்பவரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த அவ்வைப் பாட்டி வேடத்தை இவர் தாங்கிச் சிறப்பாக நடித்துத் தமிழ் பெருமக்களின் பாராட்டைப் பெற்றார்.அதன் பின்னர் இவர் அவ்வை சண்முகம் என்று அந்தப் பாத்திரப் பெயர் அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.1942-ல் அந்நிய பொருட்களை எதிர்த்து நாடெங்கும் தேசப்பிதா காந்திஜி கதர் இயக்கம் என்ற ஒரு தனி இயக்கத்தை ஆரம்பித்த நேரத்தில் கதரின் வெற்றி என்றொரு நாடகத்தைத் தயாரித்தார். கதரின் பெருமைப்பற்றி விளக்கிய அந்த நாடகம்தான் தமிழ் நாட்டில் முதன் முதலாக நடத்தப்பெற்ற தேசிய சமூக நாட கமாகும்.அந்த நாடகத்தின் பாத்திரங்கள் யாவரும் கதர் உடுத்தி நடித்தார்கள்.பின்னர் 1931 ல் வங்கம் தந்த சிங்கம் சுதந்திரப் போர் வீரர் பகத் சிங்கை மனதில் வைத்து தேச பக்தி என்னும் நாடகத்தை மேடையில் நடித்தார் -------- இந் நாடகத்தில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டி விட்டன இந்த இரு நாடகங்களும் ஆங்கில அரசால் பின்பு தடை செய்யப்பட்டன பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறுவர்களுக்கான அப்பாவின் ஆசை என்ற நாடகத்தையும் அரங்கேறச் செய்து வெற்றி கண்டார்.-----
பெற்ற விருதுகள்
1941 ல் மதுரை தமிழ்ச் சங்கம் இவருக்கு முத்தமிழ் கலா வித்துவரத்தினம் என்னும் பட்டத்தைச் சூட்டியது 1950 ல் இவருடைய முயற்சியால் தொடங்கப் பெற்ற நாடகக் கழகத்தின் முதல் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார் இலங்கை மலேசியா சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கும் டில்லி பம்பாய் கல்கத்தா நாகபுரி பெங்களூர் திருவனந்தபுரம் முதலிய வெளி மாநிலங்களுக்கும் தம் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தி உள்ளார் 1960 ல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் சண்முகம் அவர்களுக்கு சிறந்த தமிழ் நாடக நடிகர் என்ற கலாசிகாமணி விருது வழங்கியது 1961 ல் பண்டித மோதிலால் நேரு நூற்றாண்டு விழா சார்பில் புது டில்லியில் இவரது நாடகங்கள் நடைபெற்றபோது பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவற்றை பார்த்து மகிழ்ந்து பாராட்டி உள்ளார் ----- 1963 ல் புது டில்லி சங்கீத நாடக அகாடமி சண்முகம் அவர்களுக்கு இந்தியாவின் சிறந்த நாடக நடிகருக்கான விருது வழங்கிக் சிறப்பித்துள்ளது .--------------- 1968 ல் சென்னை தமிழ்நாடு சட்ட மன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் 1971 ல் இந்தியக் குடியரசுத்தலைவரால் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்......................
எழுதிய நூல்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாம் ஆற்றிய நாடகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து நாடகக் கலை என்னும் நூலை எழுதியிருக்கிறார் இந்த நூல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும்,மதுரை காமராசர் பல்கலைகழகத்திலும்,பி.ஏ.--பி.எஸ்.சி.ஆகிய வகுப்புகளுக்கு துணைப் பாட நூலாக வைக்கப்பெற்ற சிறப்புப் பெற்றது இவரது நாடகக் குழுவில் பணியாற்றிய அத்தனைப் பேர்களுக்கும் தமிழ் ஆங்கிலம் கணிதம் சரித்திரம் போன்ற பாடங்களுக்கு வகுப்புகள் எடுக்கச் செய்து நாடக நடிகர்களை படித்தவர்களாக மேம்படுத்தினார் அவர்களைக் கொண்டே அறிவுச்சுடர் என்னும் கையெழுத்துப் பத்திரிகையும் தொடங்கிக் கட்டுரைகள் எழுதச் செய்ததுடன் அந் நடிகர்கள் அனைவரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அறிவு அபிவிருத்தி சங்கம் என்னும் ஓர் அமைப்பினையும் தம் நாடக சபையிலேயே தோற்றுவித்தார் என்பது குறுப்பிடத்தக்க சிறப்பாகும் இவரது நாடக வாழ்க்கை தமிழ் நாடக வரலாற்றில் ஒரு பொன் ஏடு என்று மிகையாகாது. -------தம் 50 ஆண்டு கால நாடக வாழ்க்கையை இவர் எனது நாடக வாழ்க்கை,என்னும் தலைப்பில் ஒரு நாடக வரலாற்று நூலாக எழுதி வெளியிட்டுருக்கிறார் தம் நாடக வாழ்க்கையை முதன் முதலாக வெளியிட்ட முதல் நடிகரும் இவர்தான் என்பது குறிபிடத்தக்கது ------மேலும் தம் நாடக மேடை அனுபவங்கள் சிலவற்றைத் தொகுத்து நெஞ்சு மறக்குதில்லையே என்ற நூலாக வெளியிட்டு உள்ளார்.அவருடைய நாடக சம்மந்தமான சிறந்த கட்டுரைகளும் வானொலியில் இவர் இயற்றிய உரைகளையும் தொகுத்து நாடகச் சிந்தனைகள் என்னும் தலைப்பிலும் ஒரு நூல் வெளிவந்துள்ளது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் இவரது எனது நாடக வாழ்க்கை என்னும் நூல் 1974 ஆம் ஆண்டில் நம் நாட்டின் சிறந்த சுயசரிதை நூலுக்கான முதல் பரிசு பெற்றுள்ளது
குடும்பம்
இவருடைய மனைவியின் பெயர் சீதாலட்சுமி அம்மையார் இவர்களுக்கு கலைவாணன்,.புகழேந்தி, வெங்கடேசன்,ஆகிய மகன்கள் உள்ளனர்.கடைசி மகன் பூங்குன்றன் மறைந்து விட்டார்.ஒரே மகள் மனோன்மணி உள்ளார்.இவர்கள் அனைவரும் நன்கு பாடவும் நடிக்கவும் தெரிந்தவர்களாகப் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.---------
மறைவு இப்புகழ் வாய்ந்த நாடகக் கலை வேந்தர் தம் 61 ஆவது வயதில் 15.02.1973.அன்று இருதய நோயால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.இந்தியாவில்,குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நாடகக்கலையும் நடிப்பும் உள்ளவரை இவர் புகழ் என்றும் மங்காது நின்று ஒளி வீசும் என்பது திண்ணம்.வாழ்க நாடக மேதை அய்யா டி.கே.சண்முகம் புகழ்!
மகன்கள் தொலைபேசி எண்கள்
இவரது மகன்கள் திரு.T.K.கலைவாணன்,அவர்களுடைய தொலைபேசி எண் 044-28353689,--ஆகும் டி.கே.புகழேந்தி செல்,எண்.--9380954024---அன்னாரை பற்றி மேலும் செய்திகள் இந்த இணையத்தில் வரும் நாட்களில் காணலாம். நன்றி ஏ.எஸ்.அதியமான்,--26.07.2010
Saturday, July 24, 2010
Subscribe to:
Posts (Atom)